அவளது கண்கள்
வெண்ணிற வானில் கருநிற நிலவு !!!
- அவளது கண்கள்
எட்டு திசைகளை காட்டும் திசை காட்டும் கருவி !!!
- அவளது கண் அசைவுகள்
கருப்பு வெள்ளை மயிலிறகு !!!
-அவளது மையிட்ட கண்கள்
பறக்கின்ற ஒரு பட்டம்பூச்சியின் சிறகுகள் !!!
-அவளது கண்ணிமைகள்
கண்ணீர் முத்துக்களைக் காக்கின்ற கடற்சிப்பி !!!
-அவளது மூடிய இமைகள்
விழி அருவியிலிருந்து விழுகின்ற உப்பு தீர்த்தம் !!!
-அவளது கண்ணீர் துளிகள்
விழி வீட்டிற்கு வழி சொல்லும் தார்ச்சாலைகள் !!!
-அவளது புருவங்கள்
Back to Top